பஞ்சாப் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு: கெயிலுக்கு இடமில்லை
14-வது ஐபிஎல் சீசன் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 14-வது ஐபிஎல் சீசன் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் துபையில் மோதுகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் அறிமுக வீரர்களாக இஷான் பொரெல், எய்டன் மார்கிரம் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
கிறிஸ் கெயில் சேர்க்கப்படவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எவின் லீவிஸ் அறிமுக வீரராகக் களமிறங்குகிறார் இதில் நடப்பு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது அதேபோல் 7 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் அணி 3-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
Ishan Porel, Adil Rashid and Aiden Markram are all set to make their debut for @PunjabKingsIPL ???#PBKSvRR #VIVOIPL pic.twitter.com/FugKDrQpub
— IndianPremierLeague (@IPL) September 21, 2021
இதுவரை 22 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி உள்ளன .இதில் ராஜஸ்தான் 12 போட்டியிலும், பஞ்சாப் 10 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய இனி வரும் போட்டிகளில் இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டியாக இருப்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இன்றைய போட்டியில் கிறிஸ் கெயில் சேர்க்கப்படவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எவின் லீவிஸ் அறிமுக வீரராகக் களமிறங்குகிறார்.