நடுரோட்டில் துரத்தி துரத்தி துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொடூர இளைஞர்கள் - பதைபதைக்கும் வீடியோ!!
பஞ்சாபில் அகாலி இளைஞர் அமைப்பின் தலைவர் ஓட ஓட துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் மோகாலி மாவட்டத்தை சேர்ந்த விக்கி மிட்டுகேரா, அகாலி இளைஞர் அமைப்பின் தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார். இவர் இன்று காலை மதாவூர் மார்க்கெட்டில் ஒருவரை சந்தித்து விட்டு கிளம்பியுள்ளார்.
அப்போது காரில் அமர்ந்தவுடன், தீடீரென வந்த மர்மகும்பல் அவரை ஓட ஓட துப்பாக்கியால் சுட்டனர். 20 குண்டுகள் மேல் உடலில் துளைந்ததால் விக்கி மிட்டுகேரா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சடலத்தை மீட்டு கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Youth Akali Dal leader Vicky Middukhera shot dead in Mohali
— TOIChandigarh (@TOIChandigarh) August 7, 2021
READ MORE:https://t.co/R4r0KyWilZ pic.twitter.com/QbxUX5V7eq