4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி
பஞ்சாப் கிங்ஸ் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்
அதிரடி காட்டிய சென்னை அணி
ஐபிஎல் தொடரின் 41வது போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
முதலில் டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ருத்துராஜ் கெய்க்குவாட் 37 ரன்களிலும், சிவம் துபே 28 ரன்களிலும், மொயின் அலி 10, ரவிந்தீர ஜடேஜா 12 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அதிரடியாக விளையாடிய டெவோன் கான்வே52 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
கடைசி 4 பந்துகள் மீதம் இருக்க மைதானத்திற்கு தல தோனி வருகையில் ரசிகர்கள் ஆராவரம் செய்தனர். கூடியிருந்த ரசிகர்களின் ஆரவாரத்தால் சென்னை சேப்பாக்கம் மைதானமே அதிர்ந்தது.
இதையடுத்து கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸ்ர்களை விளாசினார். இதனால் சென்னை ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் சிக்கந்தர் ராஜா , அர்ஷ்தீப் சிங், ராகுல் சஹர், சாம் கரண் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பஞ்சாப் அணி அபார வெற்றி
20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது பஞ்சாப் அணி
தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரப்சிம்ரன் சிங் மற்றும் சிக்கர் தவான் களம் இறங்கினர். அதிரடியாக விளையாடி ப்ரப்சிம்ரன் சிங் 24 பந்துகளில் 42 ரன்களை குவித்தார்.
சிக்கர் தவான் 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில் தேஷ்பாண்டே பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அதர்வா 17 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து வந்த லிவ்விங்ஸ்டன் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.சாம் கரன் 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.