இவ்வளவு அடி வாங்கியும் திருந்தாத பஞ்சாப் அணி - கடுப்பான ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியில் அதிரடி வீரர் கிரிஸ் கெய்லுக்கு வாய்ப்பு கொடுக்காத ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
நேற்று நடந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 185 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி கடைசி ஓவரில் வெற்றியை கோட்டை விட்டது. 19 ஓவர்களில் 180 ரன்களை கடந்த அந்த அணியால் கடைசி 6 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க முடியாமல் போனது ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது.
இந்தநிலையில், அதிரடி நாயகன் கிரிஸ் கெய்லுக்கு இடம் கொடுக்காத பஞ்சாப் கிங்ஸ் அணி ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அணியின் இந்த முடிவு முட்டாள்தனமானது என ரசிகர்கள் பலர் காட்டமாக விமர்சித்துள்ளனர். எவ்வளவு அடி வாங்கியும் திருந்த மாட்டார்கள் போல என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.