பிலிப்பைன்ஸில் இந்திய கபடி பயிற்சியாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை...!

Punjab Death
By Nandhini Jan 05, 2023 07:12 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பஞ்சாபின் மோகாவைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திய கபடி பயிற்சியாளர் சுட்டுக் கொலை

இந்தியாவைச் சேர்ந்த குர்பிரீத் சிங் கிண்ட்ரு (43) என்பவர் மணிலாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குர்ப்ரீத் தனது மனைவி மற்றும் மகனுடன் வாழ்வாதாரத்திற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் சென்றார். அங்கு வியாபாரம் செய்வது மட்டுமின்றி, மணிலாவில் இளைஞர்களுக்கு கபடி பயிற்சியும் அளித்து வந்தார்.

வேலை முடிந்து அவர் வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் குர்பிரீத்தை சுட்டுக் கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே குர்பிரீத்திற்கு தலையில் பலத்த குண்டு காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பான வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.