உலகம் முழுவதும் புகழ் - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பஞ்சாப் விவசாயிகள்!

thanks mk stalin special budget punjab farmers
By Anupriyamkumaresan Aug 19, 2021 04:53 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in உலகம்
Report

வேளாண்துறைக்கென்று தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ள தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பஞ்சாப் மாநில விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களை தொடர்ந்து 3வது மாநிலமாக தமிழ்நாடு அரசு 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வேளாண்துறைக்கு என்று தனி பட்ஜெட்டை உருவாக்கி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.

தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் திட்டம் வைத்திருந்தாலும் அவற்றை செயல்படுதவில்லை. இந்த நிலையில் தமிழக அரசின் வேளாண் தனி பட்ஜெட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லை பகுதியில் போராடிவரும் வடமாநில விவசாயிகள் தமிழ்நாடு அரசின் தனி வேளாண் பட்ஜெட்-க்கு வரவேற்பு அளித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் புகழ் - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பஞ்சாப் விவசாயிகள்! | Punjab Farmers Thanks To Mk Stalin For Budget

மேலும், இயற்கை விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசின் செயல்பாடு இருப்பதாகவும், விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தின் மீது இருக்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.