குடிபோதையில் விமானத்தில் தகராறு செய்த பஞ்சாப் முதல்வர் ? - விளக்கம் கொடுத்த ஆம் ஆத்மி
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் குடித்துவிட்டு மது போதையில் ஜெர்மன் விமானமான லுஃப்தான்சா-வில் ஏறியதால், அதிகாரிகள் விமானத்திலிருந்து அவரை இறக்கிவிட்டபட்டதாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடந்த 11-ம் தேதி ஜெர்மனிக்கு சென்றார். பஞ்சாபில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முனீச், பிராங்ஃபர்ட், பெர்லின் ஆகிய நகரங்களில் அவர் தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். அங்கு நடந்த டிரிங்டெக் 2022 வர்த்தக கண்காட்சியிலும் அவர் பங்கேற்றார். அவருடன் அவரது மனைவி மற்றும் மூத்த அதிகாரிகள் சென்றிருந்தனர்.

போதையில் முதலமைச்சர்
இந்த நிலையில்இந்த நிலையில், சிரோமனி அகாலிதள கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அவர் மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதல், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா ஆகியோர், பகவந்த் மான் குடித்துவிட்டு மது போதையில் ஜெர்மன் விமானமான லுஃப்தான்சா-வில் ஏறியதால், அதிகாரிகள் விமானத்திலிருந்து அவரை இறக்கிவிட்டார்கள்" எனக் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
ஆம் ஆத்மி விளக்கம்
இது குறித்து விளக்கம் அளித்துள்ள இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சிபஞ்சாப் முதல்வருக்கு உடல்நிலை சற்று சரியில்லை. இதனால் அவர் நாடு திரும்புவார் என தகவல் தெரிவித்தார் நேற்று டெல்லியில் நடந்த அனைத்து கட்சி எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் அவர் காணொலி மூலம் உரையாற்றினார் எனவும் கூறினார்.

மேலும், பஞ்சாப் முதல்வர் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்புவதை எதிர்க்கட்சிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.