ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு
பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் குர்கரன் சிங் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் மாவட்ட நிர்வாக குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்தனர்.
20 அடி முதல் 30 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருந்தது தெரியவந்தது, உடனடியாக சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டதுடன் கமெரா வழியாக குர்கரன் சிங்கின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.
மீட்புப்படையினருடன் உள்ளூர் தன்னார்வலர்களும் உதவி புரிய சுமார் 9 மணிநேர நடவடிக்கைக்கு பின்னர் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
தொடர்ந்து சிறுவனை மருத்துவ பரிசோதனைகளுக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
#WATCH | Punjab | The three-year-old child who fell into a borewell in Hoshiarpur's Chak Sawana village has been safely rescued https://t.co/x3dmkC7QAF pic.twitter.com/JsxfIMYDGc
— ANI (@ANI) May 15, 2026