5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப்

Punjab Kings Sunrisers Hyderabad IPL 2022
By Thahir May 22, 2022 08:20 PM GMT
Report

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் சர்மா 43 ரன்னும், ஷெப்பர்ட் 26 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 25 ரன்னும் எடுத்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் சார்பில் நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார் தலா 3 விக்கெட்டும், ரபாடா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் 23 ரன்னும், ஷாருக் கான் 19 ரன்னும், கேப்டன் மயங்க் அகர்வால் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.

ஷிகர் தவான் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், லிவிங்ஸ்டோன் அதிரடியாக ஆட பஞ்சாப் அணி 15.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 7 வெற்றிகள் பெற்ற பஞ்சாப் புள்ளிப் பட்டியலில் 6வது இடம் பிடித்தது.