பொதுவெளியில் எம்எல்ஏவை கன்னத்தில் அறைந்த கணவர் - வைரலாகும் பகீர் வீடியோ!
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஒருவரை கணவர் பொதுவெளியில் வைத்து கண்ணத்தில் அறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் எம்எல்ஏ
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் எம்எல்ஏ பல்ஜிந்தர் கவுர்(35), தல்வந்தி சாபோ என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவரின் கணவர் சுக்ராஜ் சிங்.

பெண் எம்எல்ஏ தனது கணவர் மற்ற சில நபர்களுடன் வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது, கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், எம்எல்ஏ பல்ஜிந்தர் சிங்கின் கணவர் ஆத்திரமடைந்து அவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
கன்னத்தில் அறைந்த கணவர்
உடனடியாக பக்கத்தில் இருப்பவர்கள் சமாதானம் செய்து இருவரையும் விலக்கிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதியப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
Empowering women is not a deterrent to stop violence against women.Shocking to see @BaljinderKaur_ MLA getting slapped in broad day light.Mindset of men has to change.
— Brinder (@brinderdhillon) September 1, 2022
The problem lies in the perpetrator’s of these acts.Change this male chauvinism attitude more then anything else pic.twitter.com/Qxm6rhrtht
படித்த எம்எல்ஏ ஒருவருக்கே இது போன்ற குடும்ப வன்முறை ஏற்படும் போது, மற்ற நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கை நிலையை நாம் நினைத்து பார்க்க வேண்டும் என்றார்.பெண்கள் மேம்பாடு என பேசி வரும் ஆம் ஆத்மி அரசு,
இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் பாஜ்வா கருத்து தெரிவித்துள்ளார். மேலும், பெண் எம்எல்ஏ பல்ஜிந்தர் கவுர் மற்றும் அவரது கணவர் இது தொடர்பாக எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.