பஞ்சாப்பில் ஜூலை 1ம் தேதி முதல் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் - முதலமைச்சர் பக்வந்த் மான் அறிவிப்பு

punjab households அறிவிப்பு பஞ்சாப் bhagwant-mann பக்வந்த் மான் 300-units-free-electricity 300யூனிட்இலவசமின்சாரம்
By Nandhini Apr 16, 2022 05:21 AM GMT
Report

பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடந்தது.

இதனையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மன் போட்டியிட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று, பஞ்சாப் மாநிலத்திற்கு பக்வந்த் மான் முதல்வரானார். 

இந்நிலையில், பஞ்சாபின் ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது.

இதை முன்னிட்டு, ஜூலை 1ம் தேதி முதல் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பக்வந்த் மான் அறிவித்துள்ளார்.