நடிகர் புனித் ராஜ்குமார் 46-வது பிறந்தநாள் - காயத்ரி ரகுராம் வாழ்த்து
புகழ் பெற்ற கன்னட பவர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இன்று 46வது பிறந்த நாள். இதனையடுத்து, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அவரது ரசிகர்கள், சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகையும், பாஜகவின் பிரமுகரான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், பெரிய குடும்பம், பெரிய இதயம் ஒரு அரிய சேர்க்கை. விளம்பரம் இல்லாமல் மக்களுக்கு நற்காரியங்களைச் செய்வது அவரது பாணி. புனித் ராஜ்குமார் ஜி உங்களை காணவில்லை. ராஜ்குமாரின் பிறந்தநாளை நினைவு கூர்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
Big family big heart is a rare combination. Doing good deeds to people without an publicity was his style. Missing you Puneet Rajkumar ji. Remembering The Rajkumar on his birth anniversary. pic.twitter.com/ZTW5r3uMlm
— Gayathri Raguramm ??? (@BJP_Gayathri_R) March 17, 2022