தண்டித்தாலும் அஞ்சோம், கண்டித்தாலும் அஞ்சோம் : ஆர்.பி. உதயகுமார்!

admk rpudayakumar
By Irumporai Jul 18, 2021 03:22 PM GMT
Report

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவில் வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

தேர்தல் வாக்குறுதிகள் 505 கொடுத்து ஆட்சிக்கு வந்த உங்களை நினைவுப் படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

அதை நிறைவேற்றுவதும் நிறைவேற்றாததும் உங்கள் விருப்பம். மக்களுக்காக உழைப்பதும், உழைக்காமல் இருப்பதும், மக்களுக்காக திட்டங்கள் தீட்டுவதும், தீட்டாமல் இருப்பதும் உங்கள் இஷ்டம். அதை நிறைவேற்ற உங்களுக்கு நினைவுப் படுத்த வேண்டிய கடமை அதிமுகவிற்கு உண்டு.

மக்கள் நலனுக்காக உங்களைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருப்போம். இதற்காக நீங்கள் தண்டித்தாலும் சரி, கண்டித்தாலும் சரி எங்கள் தாய் நாட்டு மக்களின் நலனுக்காக உழைப்போம் என்று கூறினார்.

தண்டித்தாலும் அஞ்சோம், கண்டித்தாலும் அஞ்சோம் : ஆர்.பி. உதயகுமார்! | Punishment Or Fear Condemnation Fear Rp Udayakumar

மேலும், அதிமுகவில் தாய்ப் பாசம் இருக்கிறது, தலைமைப் பாசம் இருக்கிறது. தொண்டர் பாசம் இருக்கிறது, ஒரு குடும்பப் பாசம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.