புனீத் ராஜ்குமார் தங்கமான மனுஷன் - நடிகர் சேதுபதி உருக்கம்
Vijay Sethupathi
Tribute
Puneeth Rajkumar
By Thahir
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில், பெங்களூருவில் புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று நடிகர் விஜய்சேதுபதி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,நான் ஒரு முறை கூட நடிகர் புனீத் ராஜ்குமாரை சந்தித்தது இல்லை,ஆனால் அவரது படங்களை மட்டும் பார்த்துள்ளேன்.
அவரது மறைவுக்கு பின்பு தான் அவர் எவ்வளவு தங்கமான மனுஷன் என்பது தெரிகிறது.இவரை இது வரை சந்திக்காமல் இருந்ததற்கு வருத்தப்படுகிறேன்.என உருக்கமாக பேசினார்.