நடிகர் புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் கதறி அழுத நடிகர் சூர்யா

Suriya Crying Puneeth Rajkumar
By Thahir Nov 05, 2021 07:03 AM GMT
Report

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில், பெங்களூருவில் புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று தமிழக முன்னனி நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து புனீத் நினைவிடம் சென்ற நடிகர் சூர்யா அவரது நினைவிடத்தில் சற்று நேரம் மவுனமாக நின்றார். பின்பு அவரது புகைப்படம் நோக்கி சென்ற நடிகர் சூர்யா கதறி அழுதார்.

அவரை கண்ட அங்கிருந்தவர்கள் சோகத்திற்கு ஆளாகினர். புனீத் ராஜ்குமாரின் மரணம் கன்னட திரையுலகினர் மட்டுமின்றி தமிழ் திரையுலகினரையும் கடும் சோகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.