நீ இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை - ரஜினிகாந்த் உருக்கம்

Death Actor Rajini Puneeth Rajkumar Melting
By Thahir Nov 10, 2021 10:30 PM GMT
Report

கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி காலமானார். கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த புனீத் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புனீத்தின் திடீர் மரணம் மொத்த திரையுலகினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

புனீத் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி ஞாயிறு காலை கண்டீரவா ஸ்டேடியத்தில் துவங்கியது.

யஷ்வந்த்பூர் அருகிலுள்ள கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் தந்தை ராஜ்குமாரின் நினைவிடம் அருகில் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவருடைய நினைவிடத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்.

புனித் ராஜ்குமார் நல்லடக்கத்திற்கு பிறகு, நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்பட தமிழ் நடிகர்கள் பலரும் புனித் ராஜ்குமார் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், தனது சமூக வலைத்தள பக்கத்தில் புனீத் ராஜ்குமார் மறைவு குறித்து, 'நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை புனீத்... Rest in peace my child' என்று உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.