புனித் ராஜ்குமாரின் மரண செய்தியை கேட்டு ரசிகர் மாரடைப்பால் உயிரிழப்பு - பொதுமக்கள் சோகம்

death news Puneeth Rajkumar fans death
By Anupriyamkumaresan Oct 31, 2021 08:17 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

கன்னட நட்சத்திர நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர் ஒருவர், நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள மரூர் கிராமத்தைச் சேர்ந்த புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர் பரசுராம் தேவம்மன்வார் என்பவர், அவரின் மரண செய்தியை கேட்ட அதிர்ச்சியில் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

புனித் ராஜ்குமாரின் மரண செய்தியை கேட்டு ரசிகர் மாரடைப்பால் உயிரிழப்பு - பொதுமக்கள் சோகம் | Puneeth Rajkumar Death News Fan Death Heartattack

நேற்று காலை நடிகர் புனித்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதன்பின்னர் அவர் பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.