நான் தூக்கி வளர்த்த புள்ள போயிட்டானே..கதறி அழுத நடிகர் புனீத் அண்ணன்
கன்னட நடிகரான புனீத் ராஜ்குமாருக்கு அக்டோபர் 29ம் தேதி காலை ஜிம்மில் ஒர்க்அவுட் செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே விக்ரம் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெங்களூர் கண்டீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்ட புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அமெரிக்காவில் இருந்து வந்த மகள் புனீத்தின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்நிலையில் புனீத் உடல் அரசு மரியாதையுடன் கண்டீரவா ஸ்டுடியோஸில் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவரது அண்ணன் கண்ணீர் மல்க பேசுகையில்,நான் தூக்கி வளர்த்தவர் அப்பு. எங்களுக்கு இடையே 13 ஆண்டுகள் வித்தியாசம்.
என் மகனை இழந்தது போன்று இருக்கிறது. இவ்வளவு சீக்கிரத்தில் போய்விட்டார் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.
அவரின் சிரிப்பை அனைவரும் மிஸ் செய்கிறோம். எங்கள் குடும்பத்தில் கடைசி பிள்ளை. அவரின் இழப்பை தாங்க முடியவில்லை.
ரசிகர்கள் யாரும் தவறான முடிவை எடுக்க வேண்டாம். உயிர் விலைமதிப்பற்றது. அனைவரும் வழக்கம் போன்று தங்கள் வேலையை செய்ய துவங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அவரின் இழப்பு ஒட்டுமொத்த கன்னட திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.