பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார் - திரையுலகினர் அஞ்சலி

Actor Hospital Admit Puneeth Rajkumar
By Thahir Oct 29, 2021 07:53 AM GMT
Report

பிரபல கன்னட திரைப்பட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் மாராடைப்பால் உயிரிழந்ததாக காலமானார் 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ஆபத்தான நிலையில் அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியான நிலையில் அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது

அவர் உயிரிழப்பு கன்னட திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை, 7.33 மணிக்கு, தனது சகோதரரும், கன்னட நடிகருமான ஷிவா ராஜ்குமார் நடிப்பில் வெளியான பஜ்ரங்கி 2 படம் குறித்து தனது வாழ்த்துகளை புனித் ராஜ்குமார் சுட்டுரையில் வெளியிட்டிருந்தார்.

பஜ்ரங்கி 2 படக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த வாழ்த்துகளை வெளியிட்டு ஒரு சில மணி நேரத்தில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியல் ஆழ்த்தியுள்ளது.