இறந்த பிறகும் புனித் ராஜ்குமார் செய்த புனித செயல் - நெகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள்

puneetrajkumar Appu RIPPuneethRajkumar
By Petchi Avudaiappan Oct 29, 2021 04:50 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் எனப்படும் புனித் ராஜ்குமாரின் மறைவுக்குப் பின் அவரது இரு கண்களும் தானம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பெங்களூருவில் வசித்து வந்த அவர், இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் உயிரிழந்தார். அவரது  உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா, விளையாட்டு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இறந்த பின்னரும் புனித் ராஜ்குமார் செய்த செயலை கண்டு அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர் தனது இரு கண்களையும் தானம் செய்துள்ளார். அந்த கண்கள் பெங்களூரூவில் உள்ள நாராயணநேத்ராலயா கண் வங்கியில் சேமிக்கப்பட்டது. தான் கண் தானம் செய்வதாக 10 ஆண்டுகளுக்கு முன்பே புத்தக வெளியீட்டு விழாவில் புனித் ராஜ்குமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.