வெட்டிங் போட்டோ ஷுட் நடத்திய மணப்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு!
Maharastra
Pune
By Thahir
மகாராட்டிய மாநிலத்தில் ஒருவர் முக கவசம் அணியாமல் ஸ்கார்பியோ கார் பேனட்டில் அமர்ந்த படி வலம் வந்த மணப்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புனேவில் உள்ள டைவ் கார்ட் பள்ளத்தாக்கில் கார் மீது அமர்ந்து வெட்டிங் போட்டோ ஷுட் நடத்திய மணப்பெண் வீடியோ இணையத்தில் வைரலானது.
எவ்வித கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் போட்டோஷுட் நடத்தப்பட்டதால் மறுநாளே மணப்பெண்,கார் டிரைவர்,மற்றும் ஒளிப்பதிவாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து ஒளிப்பதிவாளர் போட்டோஷுட் நடத்த பயன்படுத்தப்பட்ட கேமராவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மணப்பெண் விதிமுறையை மீறி போட்டோஷுட் நடத்தப்பட்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.