கனமழை எதிரொலி - வெள்ள நீரில் மூழ்கியது புனே ரயில் நிலையம்... - பயணிகள் தத்தளிப்பு...!

Maharashtra
By Nandhini Oct 19, 2022 06:26 AM GMT
Report

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் புனேவில் உள்ள ரயில் நிலையம் வெள்ள நீரில் மிதக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிராவில் கனமழை

மகாராஷ்டிரா, புனேவில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. புனேவில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த கனமழையால் வீடுகளை இழந்து, உணவின்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். வீடுகளில் புகுந்த மழை நீரால் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

pune-heavy-rain-maharashtra

வெள்ள நீரில் மிதக்கும் ரயில் நிலையம்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், புனே ரயில் நிலையம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. பயணிகள் ரயில் நிலையங்களில் மிதந்து கொண்டு வருகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.