புனேவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 18 பேர் பலி - தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

pm fund pune fire 18 dead
By Anupriyamkumaresan Jun 08, 2021 04:12 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சமூகம்
Report

புனேவில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

புனேவின் பீராங்குட் நகரில் அமைந்துள்ள தனியார் ரசாயன் ஆலையில் கடந்த திங்கட்கிழமை அன்று ஏற்பட்ட இடி, மின்னலால் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ஆலைக்குள் பணிபுரிந்து கொண்டிருந்த 15 பெண்கள் உட்பட 18 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

புனேவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 18 பேர் பலி - தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு | Pune Fire 18 Dead Fund By Pm

மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.