4 வயது குழந்தையை பைக்கில் அமர வைத்து கைப்பிடிக்காமல் வண்டி ஓட்டிய நபர் - அதிர்ச்சி வீடியோ...!
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
புனேவில், பிம்ப்ரி-சின்ச்வாடில் அருகே ஒரு வாலிபர் பைக்கில் 4 வயது குழந்தையை தன் முன் அமர்த்தி இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். சென்றுக்கொண்டிருந்த அந்த நபர் திடீரென தன் இரு கைகளை எடுத்து விட்டார்.
4 வயது குழந்தையின் உயிரைப் பற்றி கவலைப்படாத அந்த நபர், பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

#Mirror lensman spotted a four-year-old kid riding a two-wheeler with a grown-up teenager sitting pillion, near Akurdi, in Pimpri-Chinchwad. Hope #PimpriChinchwadPolice and #trafficpolice in #PimpriChinchwad look into it and take action.#trafficviolation pic.twitter.com/2MsbgSWQSi
— Pune Mirror (@ThePuneMirror) January 22, 2023