பூசணி விதைகள் சாப்பிடுவதல் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

pumpkinseeds பூசணி விதைகள் சாப்பிடுவதல் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
By Petchi Avudaiappan Jan 07, 2022 09:01 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

பூசணி விதைகள் மட்டுமல்ல பூசணியின் காய், பூ என அனைத்தும்  பல நோய்களை குணப்படுத்தும் தன்மையும் கொண்டது. 

கர்ப்பப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் நீர்க்கட்டிகள் தோன்றும் நிலைதான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (psos) எனப்படுகிறது. சினைப்பையின் சுவர்கள் தடி மனாகி விடும். நீர்க்கட்டிகளின் பெருக்கத்தால் கருமுட்டைகள் உருவாக முடியாத நிலையும் ஏற்படும்.இத்தகைய பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு பூசணி விதை சிறந்த உணவுப்பொருளாகும். 

முடி உதிர்வை குறைக்கும்

பூசணி விதைகளில் உள்ள குக்குர்பிடாசின் முடி வளர்ச்சிக்கு உதவும் தனித்துவமான அமினோ அமிலமாகும். மேலும் பூசணி விதைகளில் இருக்கும் வைட்டமின் சி, முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பூசணி விதை எண்ணெய்யை உச்சந்தலையில் தேய்த்தும் வர முடிக்கு நல்லது. 

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்

பூசணி விதைகளில் பல அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இதய செயல்பாட்டையும், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை. இதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சிறுநீர் பாதை அமைப்பின் சீரான செயல்பாட்டுக்கு உதவக் கூடியது. 

கொழுப்பை குறைக்கும்

பூசணி விதை கொழுப்பு அளவை குறைப்பதோடு இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் உதவும். 

இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் 

பூசணி விதையில் உள்ள மெக்னீசியம், உடலில் உள்ள மெக்னீசியத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.இது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த உதவும்.

ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும்

உடலில் கால்சியம் சத்து குறையும்போது எலும்புகள் தேய்ந்து, பலவீனமடையும் நிலை ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும். மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயம் இருக்கிறது. பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்தலாம்.