புகழேந்தி நீக்கம்.. சசிகலாவுடன் போனில் பேசியவர்கள் நீக்கம் .. அதிரடி நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ் இபிஎஸ்!
அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்
இந்தக்கூட்டத்தில் சசிகலாவுடன் ஆடியோவில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.
அந்த வகையில் அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கபட்டதாக ஓ.பி.எஸ். - இ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர்.

அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவை விமர்சித்து புகழேந்தி நேற்று பேட்டியளித்த நிலையில், இன்று கட்சியில் இருந்து நீக்கி யதாக கூறப்படுகிறது
மேலும்,சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய
முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட 15பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.