புஜாரா இனி அவ்வளவு தானா? - கழட்டி விட தயாராகும் பிசிசிஐ
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து வரும் காலத்தில் புஜாரா நீக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா 2019ஆம் ஆண்டு முதல் தற்போது வரை புஜாரா ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அவர் இரண்டு இன்னிங்சிலும் மிக மோசமாக விளையாடினார். இதனால் இனிவரும் காலங்களில் புஜாராவிற்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அவரது இடத்தை கே.எல்.ராகுல், அனுமன் விஹாரி, அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் நிரப்ப வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் புஜாராவின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.