‘’ போராடினால் நாம் வெல்லலாம் '’ - உண்மையை ஒப்புக் கொண்ட புஜாரா

pujara indvssouthafrica testseries
By Irumporai Dec 19, 2021 11:19 AM GMT
Report

கடந்த சில நாட்களாக சர்ச்சை, மோதல், விரிசல், பேட்டி என நடைபெற்ற சம்பவங்கள் இந்திய ரசிகர்களுக்கு மன உளைச்சலை தந்தது. ஆனால், அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கிறது இந்த இந்தியா, தென்னாப்பிரிக்கா தொடர்.

இந்த நிலையில் , செய்தியாளர்களை சந்தித்த புஜாரா, தென்னாப்பிரிக்க தொடரை இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசியதாக குறிப்பிட்ட புஜாரா, அதே போல் இம்முறையும் பந்துவீச்சாளர்கள் தங்களது அணிக்கு வெற்றியை தேடி தருவார்கள் என்று கூறினார்.

‘’ போராடினால் நாம் வெல்லலாம்

மேலும், தென்னாப்பிரிக்க அணி கடந்த 6 மாதத்திற்கு மேல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை ஆனால், நாங்கள் தற்போது தான் 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்துடன் விளையாடினோம்.

இதனால் மனதளவிலும், உடல் அளவிலும் டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராக உள்ளதாக புஜாரா தெரிவித்தார். தென்னாப்பிரிக்க தொடரை முதல் முறையாக வெல்ல இது நல்ல வாய்ப்பு என்றும் புஜாரா குறிப்பிட்டார்