மோசமான நோஸ் கட் - மைக்கேல் வாஹனிடம் புஜாரா செய்த செயல் வைரல்
மைக்கேல் வாஹனிடம் புஜாரா செய்த செயல் கவனம் பெற்று வருகிறது.
மைக்கேல் கணிப்பு
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் கிரிக்கெட் வர்ணனையாளராக புஜாரா மைக்கேல் வாகன் உள்ளிட்ட பிரபலங்கள் பணி புரிகின்றனர்.
இதில், இந்திய அணியை எப்போதுமே மைக்கேல் வாஹன் வம்பு இழுத்து வருவதையே வழக்கமாக வைத்திருந்தார். அந்த வரிசையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதும், மைக்கேல் வாகன் இந்தியா ஒரே மைதானத்தில் விளையாடியதால் பட்டம் வென்றது எனக் கூறி விமர்சித்திருந்தார்.
புஜாரா செயல்
மேலும், 2020-21 ஆம் தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் 4 போட்டிகள் கொண்ட போட்டியில் விளையாடியது. இதுகுறித்த கணிப்பு வெளியிட்டிருந்த மைக்கேல், இந்திய அணி இந்த தொடரில் நான்குக்கு பூஜ்ஜியம் என்று தோற்கும் என பதிவிட்டிருந்தார்.
ஆனால் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் மைக்கேல் வாகனை தற்போது சந்தித்த புஜாரா, மைக்கேல் வாகன் போட்ட அந்த டிவீட்டை புகைப்படம் எடுத்து அதை பிரேம் செய்து மைக்கேல் வாகனிடமே சென்று அதில் கையெழுத்து வாங்கினார்.
மைக்கேல் வாகன் சிரித்துக்கொண்டே சமாளித்து அதில் கையெழுத்து போட்டு இருக்கிறார். தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தோற்கும் என மைக்கேல் வாகன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.