சொதப்பிய புஜாரா.. கடுப்பான விராட் கோலி - டென்ஷனில் ரசிகர்கள்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் புஜாரா மீண்டும் சொதப்பியுள்ளார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
மழையால் தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் சதமடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இப்போட்டியில் 2 விக்கெட்டுக்கு களமிறங்கிய புஜாரா வழக்கம் போல குறைந்த ரன்களில் வெளியேறினார். 9 ரன்களில் அவுட்டான அவர் கேப்டன் விராட் கோலியின் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா சொதப்பிய நிலையில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கக்கூடாது என ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் கோலி தன் மீது வைத்த நம்பிக்கையை புஜாரா உடைத்துள்ளார்.