குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நுழையும் பிரபலம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மீண்டும் நடிகர் புகழ் என்ட்ரி கொடுத்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசன் ரசிகர்களின் பேராதரவுடன் கடந்த வாரம் ஒளிபரப்பாக தொடங்கியது. வித்தியாசமான முயற்சியில் சமையலுடன் காமெடியும் சேர்ந்து நிகழ்வதால் இந்நிகழ்ச்சி வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்த சீசனில் கோமாளியாக சூப்பர் சிங்கர் பரத், மூக்குத்தி முருகன், குரேஷி ஆகியோர் களமிறக்கப்பட்டனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கடந்த சீசனில் காமெடியில் ரகளை செய்த புகழ் படங்களில் நடிக்க தொடங்கியதால் அவர் இடம் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் சோகமடைந்தனர்.
அதேசமயம் ரோஷினி, மனோபாலா, வித்யுலேகா, சூர்யாவின் ஸ்ரீ, ஆல்பம் பட ஹீரோயின் ஸ்ருதிகா அர்ஜூன், கிரேஸ் கருணாஸ், ராகுல் தாத்தா, அம்மு அபிராமி என பல நட்சத்திரங்கள் குக் வித் கோமாளி 2ல் நுழைந்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக குக் வித் கோமாளியில் புகழ் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
அவர் கோமாளியாக வந்துள்ளாரா அல்லது சிறப்பு விருந்தினாராக என்ட்ரி கொடுத்துள்ளாரா என்பது குறித்து தெரியவில்லை. அவர் குக் வித் கோமாளி 3 செட்டுக்கு வரும் ப்ரோமோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. புகழைப் பார்த்த ரசிகர்கள் ஆவலுடன் இந்த வார எபிசோடுக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.