வெறும் 875 கிராமுடன் பிறந்த குழந்தை: காப்பாற்றிய மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டுகள்

district mother born
By Jon Feb 08, 2021 03:15 PM GMT
Report

புதுக்கோட்டையில் வெறும் 875 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை அரசு மருத்துவர்கள் சிகிச்சையளித்து காப்பாற்றியுள்ளனர். மறவன்பட்டியை சேர்ந்த தம்பதியினர் இந்திராணி- முத்துவீரன், இவர்களுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை வெறும் 875 கிராம் மட்டுமே இருந்தால், உடனடியாக தீவிரசிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அத்துடன் குழந்தைக்கு மூச்சுத்திணறல் இருந்ததால், வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஒருவார கால சிகிச்சைக்கு பின்னர் குழந்தை சுவாசிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டதும், குழந்தைக்கு பால் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து குழந்தைக்கு கிருமிதொற்றுக்கான சிகிச்சையும், மஞ்சள் காமாலைக்கான போட்டோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டது.

இவ்வாறு சீரான சிகிச்சைக்கு பின்னர், 48 நாட்களில் குழந்தையின் எடை 1.1 கிலோவாக அதிகரித்தது, குழந்தையும் தாயிடம் பால் அருந்திய பின்னர், அனைத்து சிகிச்சைகளும் முடிக்கப்பட்டு பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் மருத்துவர்கள். குறைவான எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.