2 நாள் முழு ஊரடங்கு அறிவிப்பு:வெளியான அதிரடி அறிவிப்பு

people lockdown pondicherry full
By Praveen Apr 20, 2021 08:07 PM GMT
Report

புதுச்சேரி மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தீவிரம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உள்ளது. கடந்த 4 வாரங்களில் கொரோனா பாதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் பாதிப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.டெல்லியில் ஒரு வார முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 15 நாள் முழு முடக்கம் அமலில் உள்ளது. தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதே போல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலங்களிலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

"வரும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு. முழு ஊரடங்கு இல்லாத நாட்களில் பகல் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் இயங்கும். அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்படும். பகல் 2 மணிக்கு பின் உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளார்.