புதுச்சேரியில் 91.23 சதவிகித வாக்குகள் பதிவானது
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் வரலாறு காணாத அளவு 91.23 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் 30 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன, 2026ம் ஆண்டாக 15வது சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது.
5,03,810 பெண் வாக்காளர்கள், 4,46,361 ஆண் வாக்காளர்கள், 140 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட 9,50,311 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

100 சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படட் நிலையில் தேர்தல் நாளன்று 89.8 சதவிகித வாக்குகள் பதிவானது, தற்போது தபால் வாக்குகளையும் சேர்த்து 91.23 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
வரலாறு காணாத அளவில் வாக்குசதவிகிதம் உயர்ந்துள்ளதால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற கலக்கம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக முதன்முறையாக தேர்தலை எதிர்கொள்ளும் தவெக-வுக்கு இளைஞர்கள் ஆதரவு அதிகம் என்பதால் யாருக்கு வெற்றி என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
ஜுலை மாதத்தில் இறுதியில் சுக்கிரன் பெயர்ச்சி.... அதிர்ஷ்டத்தினை பெறும் 4 ராசியினர் இவர்கள் தானாம் Manithan