புதுச்சேரி பேரவை துணைத் தலைவர் இல்லத்தில் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை பேரவை துணைத் தலைவர் பாலன் இல்லத்திற்கு சென்று ஆலோசனை மேற்கொண்டார். புதுச்சேரியில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அரசுக்கு ஆதரவளித்து வரும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பதவி விலகி வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு புதுவை சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியுள்ளது.
தனது அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக இன்று காலை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பேரவை துணைத் தலைவர் பாலன் இல்லத்திற்கு சென்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டார்.