மேடை இல்லை; இவர்களுக்கெல்லாம் அனுமதி கிடையாது - விஜய் பிரச்சாரத்தில் பெரிய மாற்றம்!
விஜய்யின் கடந்த காலப் பொதுக்கூட்டங்களை விட இந்தப் பொதுக்கூட்டம் மொத்தமாக மாறியுள்ளது.
தவெக பொதுக்கூட்டம்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. முதல் திறந்தவெளி மாநாடு என்பதால் அங்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காகப் பல நூறு போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மாற்றங்கள்
பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கும் கூட க்யூஆர் கோட் முறையிலேயே தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், பொதுக்கூட்டம் தொடங்க ஆரம்பிக்கும் நேரத்தில் க்யூஆர் கோட் இல்லாமலும் தொண்டர்கள் உள்ளே நுழைய முயன்றனர். இதனால் அங்குச் சற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நடுவே மிக நீண்ட ரேம்ப் வாக் மேடை போடப்பட்டு இருக்கும். அந்த மேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களைச் சந்திப்பார். இந்த முறை Rampwalk எதுவும் அமைக்கப்படவில்லை. கேரவன் மேலேயே மைக் வைத்து செட்-அப் செய்திருந்தனர்.
கூட்டத்திற்கு முன்பு புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா அதில் ஏறிப் பேசிவிட்டுச் சென்றனர். அதைத் தொடர்ந்து விஜய்யும் அதில் ஏறி பேசினார்.