1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - பள்ளியை சூறையாடி ஆசிரியரை வெளுத்த மக்கள்
மாணவிக்கு பாலியல் தொல்லை நடந்த பள்ளியில் பொதுமக்கள் சூறையாடியுள்ளனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை
புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் பகுதியில் தனியார் பள்ளியில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்தும் வரும் 6 வயது மாணவி படித்து வந்துள்ளார்.
இந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதோடு, பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சூறையாடப்பட்ட பள்ளி
இது தொடர்பாக புகார் அளித்தும் ஆசிரியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பள்ளியின் உரிமையாளர் ஒரு கட்சிக்கு நெருக்கமாக இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர், அந்த ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும், பள்ளிக்கு சீல் வைக்கவேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் பள்ளிக்குள் நுழைந்த பொதுமக்கள் பள்ளியை சூறையாடியுள்ளனர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மணிகண்டன் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையினர் ஆசிரியரை பொதுமக்களிடமிருந்து மீட்டு அழைத்து சென்றனர். தற்போது அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.