புதுவையில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல். ஏ .ராஜினாமா: ஆட்டம் காண்கிறதா நாராயணசாமி அரசு
party
bjp
Congress
By Jon
புதுச்சேரியில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் மேலும் ஒரு எம் .எல். ஏ. ராஜினாமா செய்துள்ளார். புதுவை காங்கிரஸ் எம். எல். ஏ. வாக இருந்த லட்சுமி நாராயணன் தனது பதவியினை ராஜினாமா செய்துள்ளார்.
கட்சியில் உரிய மரியாதை இல்லாத்தால் ராஜினாமா செய்ததாக அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் தன்னால் ஆட்சி கவிழவில்லை, அது ஏற்கனவே கவிழும் நிலையில்தான் உள்ளது என அவர் கூறியுள்ளார்.
இதனால் முதல்வர் நாராயனசாமி அரசுக்கு எம் எல் ஏக்களின் ஆதரவு 13 ஆக குறைந்ததால் பெரும்பான்மையை இழக்கு சூழல் ஏற்பட்டுள்ளது.