மீண்டும் புதுவை முகாமிடும் மோடி : பரபரப்பாகும் தேர்தல் களம்
தமிழகத்திலும், புதுவையிலும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி வருகிற 30ம் தேதி புதுச்சேரி வர உள்ளார். கடந்த மாதம் 25ம் தேதி புதுச்சேரிக்கு வந்திருந்த பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இந்நிலையில், வருகிற 30ம் தேதி மீண்டும் புதுச்சேரி வரும் பிரதமர் மோடி, AFT மைதானத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
புதுவையில் ஏற்கனவே தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றிய நிலையில் தற்போது மீண்டும் பிரதமர் மோடி வரும் 30ம் தேதி புதுவை வருகிறார்.