புதுச்சேரியில் மேலும் ஒரு எம். எல். ஏ ராஜினாமா
party
congress
Narayanaswamy
By Jon
புதுச்சேரியில் தட்டஞ்சாவடி தொகுதி எம் எல் ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் எம் எல் ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்த நிலையில் திமுக எம் எல் ஏ ராஜினாமா செய்துள்ளார் நாளை புதுவை சட்டப்பேர்வையில் முதல்வர் நாராயணசாமி நாளை நம்பிக்கை வாக்கு கோர உள்ள நிலையில் அடுத்தடுத்து ராஜினாமா நடந்துள்ளது.
தனது ராஜினாமா கடிதத்தினை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் கொடுத்தார்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை திமுக தலமையிடம் கூறிவிட்டதாக வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டமன்ற பதவியை மட்டுமே ராஜினாமா செய்துள்ளதாகவும் திமுகவிலிருந்து விலகவில்லை எனவும் வெங்கடேசன் கூறியுள்ளார்.