Sunday, May 11, 2025

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்?

lockdown puducherry extend
By Anupriyamkumaresan 4 years ago
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சமூகம்
Report

புதுச்சேரியில் ஜூலை 15 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கூடுதல் தளர்வுகளுடன் வரும் ஜூலை 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்? | Puducherry Lockdown Relaxation Extendens Announce

இதில் காலை 9 மணி வரை மட்டுமே பயன்பாட்டில் இருந்த கடற்கரை சாலை, பூங்காக்கள் என அனைத்தும் இனி இரவு 9 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், உடற்பயிற்சி கூடங்கள் 50% வாடிக்கையாளருடன் செயல்படலாம் என்றும் கோயில்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்கலாம் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்? | Puducherry Lockdown Relaxation Extendens Announce