புத்தாண்டு தள்ளுபடி : ஒரு குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 ஃப்ரி , எங்கு தெரியுமா?
பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். அதிலும் மது அருந்தி விட்டு நல்லது, கெட்டது எது நடந்தாலும், மதுவோடு தள்ளாடுபவர்களை ஒவ்வொரு கொண்டாட்டங்களிலும் நாம் பார்க்கலாம்.
அந்த அளவிற்கு மது, மக்களோடு கலந்துவிட்டது. இதிலிருந்து எப்படி இவர்களை மீட்பது என்பதே பெரிய கவலை தான். இது ஒருபுறமிருக்க, புதுச்சேரியில் ஒரு மதுபானக்கடை, அதிரடி புத்தாண்டு சலுகையை அள்ளி வீசியிருக்கிறது.
புதுச்சேரியில் மதுவிற்பனை பரவலாக்கப்பட்ட ஒன்று. அதனால் அங்கு விற்க கடும் போட்டி இருக்கும். வாடிக்கையாளரை வரவேற்பதில், அவ்வப்போது சலுகைகளை அள்ளி வீசுவார்கள். அந்த வகையில் ஒரு மதுபான கடையில் ஒரு குவாட்டர் வாங்கினால், ஒரு சிக்கன் 65 இலவசம் என அறிவித்துள்ளது.
அதாவது, மதுபானத்திற்கு சைடிஷ் கொடுத்துவிடுவார்கள். மதுபானத்திற்கு மட்டும் செலவு செய்தால் போது, மற்றபடி எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை,‛நீங்க வந்தா மட்டும் போதும் என்பதைப் போல அறிவித்திருக்கிறார் அதன் உரிமையாளர்.
மதுநாட்டுக்கும் வீட்டுக்கும் உயிர் கேடு என அரசு அறிவித்துள்ள நிலையில் ,மதுபானக்கடைக்காரர்களின் போட்டி, குடிமகன்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. இது ஒருபுறம் என்றால், இணையத்தில் வைரலாகி வரும் இந்த அறிவிப்பை கண்டு, தமிழ்நாடு குடிமகன்கள் கலங்கிப் போயுள்ளனர்