புதுச்சேரியில் 1 முதல் 11ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி
student
puducherry
pass
soundararajan
By Jon
புதுச்சேரியில் ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களும் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி தேர்ச்சி பெற்றதாக அம்மாநில துணை நிலை பொறுப்பு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவித்துள்ளார்.
மேலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.