உயிரிழந்த இடத்தில் செல்லமகள் யானை லட்சுமிக்கு நினைவு சிலை...!
புதுச்சேரியில் உயிரிழந்த இடத்தில் யானை லட்சுமிக்கு நினைவு சிலை வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யானை லட்சுமி உயிரிழந்தது
நேற்று முன்தினம் வழக்கம்போல் காமாச்சி அம்மன் கோயில் சாலையில் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட யானை லட்சுமி, திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு 1997ம் ஆண்டு 5 வயதாக இருந்தபோது லட்சுமி வந்தது.
புத்துணர்வு முகாமில் உள்ள நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ந்து அருள்பாலித்து வந்தது. உயிரிழந்த யானை லட்சுமி, மணக்குள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
லட்சுமி யானையை பக்தர்கள் கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். யானை லட்சுமி உயிரிழப்பு காரணமாக மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டது.
கதறி அழுத பாகன்
அன்று மாலை யானை லட்சுமி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர். யானை வளர்த்த பாகன் யானை லட்சுமி உடலைப் பார்த்து கதறி அழுதார். இவர் அழுததைப் பார்த்த பக்தர்கள் நிலைகுலைந்தனர்.
யானை லட்சுமிக்கு நினைவு சிலை
3 அடி உயரத்திற்கு பீடமும், அதன் மீது 2 அடிக்கு யானை லட்சுமி சாய்ந்து இருப்பது போல சிலை வடிவமைக்கப்பட்டு, யானை உயிரிழந்த இடத்தில் நிருவப்பட உள்ளது. சிலையில் ‘புதுச்சேரியின் செல்லமகள்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
Final procession of Elephant Lakshmi of Manukula Vinayagar Temple in Puducherry. Thousands and thousands of people took part in the procession. #Elephant #ElephantLakshmi #Puducherry #PuducherryLakshmi #lakshmielephant #Lakshmi #ManakulaVinayagarTemple #ManakulaVinayagar pic.twitter.com/H0hYAzfTnC
— DT Next (@dt_next) November 30, 2022
Puducherry’s Darling #Lakshmi, the 32-year-old elephant of Sri #ManakulaVinayagar Temple collapsed on the road and died while she was on her routine daily walk pic.twitter.com/HVc7ChtDmp
— Satyaagrah (@satyaagrahindia) November 30, 2022