நான் உங்கள் தேர்தல் உதவி ரோபோட் : புதுச்சேரியில் வாக்காளர்களை வரவேற்ற ரோபோட் நிலா!

Tamil nadu Puducherry Election
By Vinoja Apr 09, 2026 08:30 AM GMT
Report

புதுச்சேரியில் தாவணி அணிந்து கையில் பூக்கள் நிரப்பப்பட்ட தட்டுடன் வாக்காளர்களை வரவேற்ற ரோபோட் நிலா அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

புதுச்சேரியில் இன்றைய தினம் சட்டமன்றத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு ஆரம்பமாக நிலையில், வாக்காளர்களும் ஆர்வத்தோடு வாக்களித்து வருகின்றனர்.

நான் உங்கள் தேர்தல் உதவி ரோபோட் : புதுச்சேரியில் வாக்காளர்களை வரவேற்ற ரோபோட் நிலா! | Puducherry Elections Robot Nila Welcomes Voters

இந்நிலையில், புதுச்சேரியில் அமைந்திருக்கக் கூடிய வி.ஓ.சி அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் நிலா என்ற பெயர் கொண்ட ரோபோட் வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

குறித்த ரோபோட் பாரம்பரிய உடையான தாவணியை அணிந்து கையில் பூத்தட்டை ஏந்தியபடி வாக்காளர்களுக்கு பூக்கொடுத்து வரவேப்பதுடன் வாக்கபாளர்களுக்கு தேவையாக முக்கிய அறிவுறுத்தல்களையும் அழகிய குரலில் வழங்கி வருவது அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

புதுச்சேரி தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய முயற்ச்சியை பல வாக்காளர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்த முன்னெடுப்பு அதிகளவிலான வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு வர வைக்கும் முயற்சி என்பதால் இது பலரது பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.

வாக்குச் சாவடிகளில் புதுச்சேரி தேர்தல் ஆணையம் பாதுகாப்பு நடைமுறைகளை பலப்படுத்தி இருக்கிறது மேலும் டிரோன் மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.