புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவை தேர்தல் 2026

Puducherry Election
By Fathima Apr 09, 2026 03:21 AM GMT
Report

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

காலை 7 மணிமுதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர், சுமார் 9.50 லட்சம் வாக்காளர்கள் இங்கு உள்ளனர்.

ஆளும் என்டிஏ கூட்டணி, காங்கிரஸ்- திமுக கூட்டணி, நாதக மற்றும் தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.

வாக்குசாவடிகளில் வாக்காளர்களுக்கு கழிவறை, குடிநீர், ஓய்வறை போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சில வாக்குசாவடிகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவை தேர்தல் 2026 | Puducherry Election 2026

கேரளா சட்டப்பேரவை தேர்தல்

140 தொகுதிகளை கொண்ட கேரள மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. இங்கு பிரதான கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உட்பட 883 பேர் போட்டியிடுகின்றனர்.