புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு - முதல்வர் ரெங்கசாமி
puducherry
curfew extends
By Anupriyamkumaresan
4 years ago
புதுச்சேரியில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரெங்கசாமி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், மாநில அரசுகள் தளர்வுகளை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், புதுச்சேரியில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுக்கடைகளிலே மது அருந்தவும், பார்களை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
38 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் குஷியில் உள்ளனர்.