புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு கோடை விழா

By Nandhini Jun 02, 2022 05:26 AM GMT
Report

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வார இறுதி நாட்களில் அதிகளவில் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று முதல் 4 நாட்கள் புதுச்சேரியில் கோடை விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைக்க உள்ளார்.     

புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு கோடை விழா | Puducherry