10 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்து வந்த கேடு கெட்ட முதியவர்
புதுச்சேரி அருகே 10 வயது சிறுமியை கொலை செய்து விடுவேன் என மிரட்டி தொடர்ந்து பல நாட்களாக பாலியல் தொல்லை அளித்து வந்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி ஓதியஞ்சோலை பகுதியை சேர்ந்த அந்தோணி, 10 வயது சிறுமி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். மேலும் இதை யாரிடமும் சொல்லிவிடக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
இதனால் பயந்து நடுங்கிய சிறுமி வெளியில் சொல்லாமலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் முதியவரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால், வீட்டில் விஷயத்தை தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த முதியவரை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.