வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் : தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர்
புதுச்சேரியில் மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அடித்து செல்லப்பட்டார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. புதுச்சேரி, காலாபேட், கனகசெட்டிகுளம், வில்லியனூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மக்கள் தங்கள் இயல்பு நிலையை இழந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அடித்து செல்லப்பட்டார்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட இரு சக்கர வாகனத்தை மீட்க முயற்சித்த போது இந்த விபரீதம் நடந்துள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஹசினா மேகம் என்பவரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
அத்துடன் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் ஒன்று முதல் 9ம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.